Thursday, December 13, 2018

திருவருகைக்காலம் - 2ஆம் வாரம் - வெள்ளி

திருவருகைக்காலம்  - 2ஆம் வாரம் - வெள்ளி

14 12 2018

முதல் வாசகம்

என் கட்டளைகளுக்குச் செவிசாய்த்திரு.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 48: 17-19

இஸ்ரயேலின் தூயவரும் உன் மீட்பருமான ஆண்டவர் கூறுவது இதுவே: உன் கடவுளாகிய ஆண்டவர் நானே! பயனுள்ளவற்றை உனக்குக் கற்பிப்பவரும் செல்லவேண்டிய வழியில் உன்னை நடத்துபவரும் நானே!

என் கட்டளைக்குச் செவிசாய்த்திருப்பாயானால், உன் நிறைவாழ்வு ஆற்றைப்போலும், உன் வெற்றி கடல் அலை போலும் பாய்ந்து வந்திருக்கும். உன் வழிமரபினர் மணல் அளவாயும், உன் வழித் தோன்றல்கள் கதிர்மணிகள் போன்றும் இருந்திருப்பர்; அவர்கள் வெட்டி வீழ்த்தப்பட்டிரார்; அவர்கள் பெயர் என் திருமுன்னின்று அழிக்கப் பட்டிராது.

 ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

Monday, December 10, 2018

ஜெருசலேம் புனித பயணம் விண்ணப்பிக்க வாய்ப்பு

🎯ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள தமிழக அரசின் ரூ 20 ஆயிரம் நிதியுதவி பெறுவதற்கான விண்ணப்பங்களை வரும் 14-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் - 🚨தமிழக அரசு

* இதற்கான நிபந்தனைகள், விதிமுறைகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை http://www.bcmbcmw.tn.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம்.

Sunday, December 9, 2018

கடையம் தேவாலயத்தில் வின்சென்ட் தே பவுல் சபை முப்பெரும் விழா









நெல்லை. டிச.9-
    வின்சென்ட் தே பவுல்சபை இருதயகுளம் வட்டாரசபை கூட்டம் கடையம் புனித இஞ்ஞாசியாா்  ஆலயத்தில் நடைபெற்றது.  கடையம் கிளை சபையின் 35 வது ஆண்டு விழா- வட்டார சபை முன்னாள் நிா்வாகிகளுக்கு  பாராட்டு விழா -வட்டாரசபை புதிய தலைவா் பொறுப்பேற்ப்பு  விழா நடைபெற்றது.
     விழாவிற்கு மத்திய சபை தலைவா் வெள்ளத்துரை தலைமை தாங்கினாா்.
செயலாளா் கிளமண்ட் வளவன், முன்னாள் வட்டாரசபை தலைவா் இந்திராரவி, செயலாளா் ஜோசப் செல்வராஜ், பொருளாளா் நேவிராஜா  கிளை சபை தலைவா் அமல்ராஜ் முன்னிலை வகித்தனா். செயலாளா் ாிஷி சங்கா்  துணை தலைவா் ஸ்டீபன் சேவியா் ஞானம் பொருளாளா் ஆனந்தராஜ் வரவேற்றனா்.
      அனைத்து கிளை சபை தலைவா்கள் பொறுப்பாளா்கள் வட்டாரசபையின் முன்னாள் நிா்வாகிகளை பாராட்டி பேசினா். அருட்தந்தை அருள் தினேஷ் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தொிவித்தாா். நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இருதய குளம் வட்டார சபை புதிய தலைவராக அன்போன்ஸ் பொறுப்பேற்றாா். மத்திய சபை தலைவா் வெள்ளத்துரை, செயலாளா்கிளமண்ட் வளவன் முன்னிலையில்
 முன்னாள் வட்டாரசபை பொறுப்பாளா்கள் வரவு செலவு கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை  புதிய தலைவாிடம் ஒப்படைத்தனா். கிளை சபையினா் மாதாந்திர அறிக்கையை தாக்கல் செய்தனா். இறுதி ஜெபத்துடன் விழா நிறைவு பெற்றது. 

Friday, December 7, 2018

டிசம்பர் 8 இன்றைய வாசகம்

டிசம்பர் 8 : நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

+லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, ``அருள்நிறைந்தவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்றார்.

இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, ``மரியா, அஞ்ச வேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின்மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'' என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், ``இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!'' என்றார்.

வானதூதர் அவரிடம், ``தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப்போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை'' என்றார்.

பின்னர் மரியா, ``நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்'' என்றார்.

அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு. 
--------------------------------------------
மரியாவின் அமல உற்பவம் (டிசம்பர் 08)

நிகழ்வு

முன்பொரு காலத்தில் அரசன் ஒருவன் இருந்தான். அவன் மக்களை அதிகம் அன்புசெய்தான். மக்களும் அவனை அதிகமாக அன்பு செய்தார்கள். அப்படிப்பட்ட அரசன் ஒருநாள் தன்னுடைய அமைச்சர் மற்றும் படைவீரர்களோடு நகர்வலம் சென்றான். அவன் சென்ற வழியில் குழந்தை ஒன்று அழுதுகொண்டிருந்தது. அதைக் கவனித்த அரசன் அந்தக் குழந்தையை தன்னுடைய கையில் ஏந்தி, “பிள்ளாய்! ஏன் இப்படி அழுகின்றாய்?, உனக்கு என்ன வேண்டும் சொல், நான் அதைத் தருகின்றேன்?” என்றான். அதற்கு அந்த குழந்தை, “நான் என்னுடைய தாயை விட்டுப்பிரிந்து வழிதவறி வந்துவிட்டேன். அவளிடம் மீண்டுமாக நான் போகவேண்டும்” என்று அழுதுகொண்டே சொன்னது. அதற்கு அரசன், “நான் உன்னை உன்னுடைய தாயிடத்தில் கொண்டுபோய் விடுகிறேன். ஆனால் அவள் எப்படி இருப்பாள் என்பதை மட்டும் சொல்?” என்றான். “என்னுடைய தாய் மிகவும் அழகாக இருப்பாள்” என்றது அந்தக் குழந்தை.
உடனே அரசன் தன்னுடைய நாட்டில் இருக்கும் அனைத்து அழகான தாய்மார்களையும் அரண்மனைக்கு வருமாறு தண்டோரா போட்டு அறிவித்தான். அரசனுடைய அறிவிப்பைத் தொடர்ந்து நாட்டில் இருந்த அழகான தாய்மார்கள் எல்லாரும் அரண்மனைக்கு வந்தார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தில் யாருமே குழந்தையின் தாயாக இருக்கவில்லை. அவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தார்கள். கடைசியல் பெண்ணொருத்தி மெலிந்த தேகத்தோடு கொஞ்சம் கருமை நிறத்தில் அரண்மனைக்கு உள்ளே நுழைந்தான். அவளுடைய முகத்தில் தன்னுடைய குழந்தையை இழந்த சோகம் தெரிந்தது. அவளைப் பார்த்த குழந்தை அம்மா என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்து, அவளுடைய தோளைக் கட்டிப்பிடித்து அணைத்துக் கொண்டது. எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அரசனுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. ‘அழகான தாய் என்று சொல்லிவிட்டு, இப்படி மெலிந்த தேகத்தோடு கருமை நிறத்தில் இருக்கும் பெண்ணொருத்தியை தாயென்று கட்டிக்கொள்கிறதே’ என்று ஒரு கணம் அவன் யோசித்தான். பின்னர் அவன் குழந்தைக்கு தன்னுடைய தாய் எப்போதுமே அழகானவள் என்ற உண்மையை உணர்ந்தவனாய் ஆறுதல் அடைந்தான்.
ஆம், நம் அனைவருக்கும் எப்போதுமே நம்முடைய தாயானவள் அழகானவள். அதிலும் குறிப்பாக பாவ மாசில்லாது இந்த மண்ணுலகத்தில் பிறந்த நம் அன்புத் தாய் அன்னை மரியா இன்னும் அழகானவள்.
வரலாற்றுப் பின்னணி
இன்று நாம் அன்னை மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி மகிழ்கின்றோம். இவ்விழா தொடக்கத்தில் பல்வேறு பெயர்களில் கொண்டாப்பட்டு வந்தாலும் 1854 ஆம் ஆண்டு டிசம்பர் 8 நாள்தான் திருத்தந்தை ஒன்பதாம் பத்திநாதர் ‘மரியாவின் அமலோற்பவப் பெருவிழா’ என்ற பெயரில் கொண்டாட அதிகாரப் பூர்வமாக அறிவித்தார். மேலும் அவர் தான் எழுதிய Ineffabilis Deus என்ற மடலில் “மனுக்குல மீட்பரான இயேசு கிறிஸ்துவின் பயன்களை முன்னிட்டு கன்னிமரி கருவான நொடிப்பொழுதிலேயே எல்லாம் வல்ல இறைவனது அருளாலும் சலுகையாலும் ஜென்மப் பாவமாசு அணுகாதவளாய்த் தோன்றினார்” என்று குறிப்பிட்டு அமலோற்பவியான கன்னி மரியா என்ற விசுவாசப் பிரகடனத்தை அறிவித்தார்.
திருத்தந்தையின் அறிவிப்பை உறுதிசெய்யும் வகையில் 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பிரான்சு நாட்டில் உள்ள லூர்து நகரில் பெர்னதத் என்ற பதினான்கு வயது சிறுமிக்குக் காட்சி கொடுத்த மரியா ‘நாமே அமல அற்பவம்’ என்று அறிவித்தார். அன்றிலிருந்து இன்றுவரை மரியா அமலோற்பவி என்பதை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 8 நாள் மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடி வருகின்றோம். இந்த நேரத்தில் இவ்விழா உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
பழைய ஏற்பாட்டில் தாவீது அரசன் ஆண்டவருக்காக கோவில் கட்ட நினைத்தபோது, ஆண்டவர் அவரிடம், “நீ மிகுதியான குருதியைச் சிந்தினாய், பெரும் போர்களை நடத்தினாய்; எனக்கு முன்பாகத் தரையில் நீ மிகுதியான குருதியைச் சிந்தியதால், என் பெயருக்கு நீ கோவில் கட்ட வேண்டாம்” என்கிறார் ( 1 குறி 22 :8), கடவுளுக்கு கோவில் கட்ட இருப்பவர் தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் அவர், தன்னுடைய மகனைப் பெற்றெடுக்க இருக்கும் பெண் எவ்வளவு தூய்மையாக இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்?. ஆதலால்தான் பாவக்கறை சிறுதும் இல்லாத தன்னுடைய மகன் இயேசு பிறக்க பாவமாசு அணுகாத மரியவைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்காக அவர் மரியாவை ஜென்மப் பாவத்திலிருந்து விடுக்கின்றார்; அவரை இறைவன் தங்கும் இல்லிடமாக மாற்றுகின்றார். இத்தகைய சிறப்புகளைக் கொண்டவளாய் விளங்கியதால்தான் வானதூதர் கபிரியேல் கூட, “அருள் மிகப் பெற்றவரே வாழ்க, ஆண்டவர் உம்முடனே” என்று வாழ்த்துகிறார் (லூக் 1: 28). ஆகவே மரியாவின் அமலோற்பவத்தை நினைவுகூறும் வேளையில் கடவுள் மரியாவுக்கு அளித்த மிகப்பெரிய பேற்றினை நினைவுகூர்ந்து பார்ப்போம்.

கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்

மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
1. தூய மாசற்ற வாழ்க்கை வாழ முயற்சிப்போம்
மரியா பாவ மாசின்றிப் பிறந்தார், அது மட்டுமல்லாமல் பாவத் தூண்டுகை இல்லாது இருந்தார். அவருடைய விழாவை கொண்டாடும் நாம் அவரைப் போன்று மாசற்ற தூய வாழ்க்கை வாழ்கின்றோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
திருத்தந்தை தூய இரண்டாம் யோவான் பவுல் கூறுவார், “இன்றைக்கு மனிதர்கள் பாவம் என்ற உணர்வே இல்லாமல் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய காலத்தின் மிகப்பெரிய பாவம்” என்று. இது முற்றிலும் உண்மை. மனிதர்கள் கடவுளுக்கும் பயப்படாமல், தங்களுடைய மனசாட்சிக்கும் பயப்படாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒருசிலர் தங்களுடைய மனசாட்சியை அடகு வைத்து வாழ்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் மரியாவின் மாசற்ற தன்மையை நினைத்துப் பார்ப்பது மிகவும் பொருத்தமானதாகும். அவர் தன்னையே கடவுளுக்கு உகந்த தூய, நறுமணம் வீசும் பலிபொருளாக ஒப்புக்கொடுத்தார். நாமும் நம்மையே கடவுளுக்கு உகந்த தூய பலிபொருளாக ஒப்புக்கொடுக்கவேண்டும் (எபே 5:2). அதுதான் நம்முன்னே இருக்கும் மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
தூய பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்தில் (இன்றைய இரண்டாம் வாசகம்) கூறுவார், “நாம் தூயோராகவும், மாசற்றோராகவும் தம் திருமுன் விளங்கும்படி, உலகம் தோன்றுவதற்கு முன்பே கடவுள் நம்மை கிறிஸ்து வழியாகத் தேர்ந்தெடுத்தார் (எபே 1:4) என்று. ஆகவே, நாம் தூயோராகவும் மாசற்றோராகவும் விளங்க வேண்டும் அதுதான் இறைவனிடமிருந்து எதிர்பார்க்கும் ஒன்றாகும்.
இது ஒரு யூதக் கதை. ஒருநாள் ரெப் லிப் (Reb Lieb) என்ற யூத இளைஞர் மெஸ்ரிச்சர் மாகித் (Mezritcher Maggid) என்ற இரபியை பார்க்கச் சென்றார். வழியில் ரெப் லிப் தன்னுடைய நண்பரைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர் அவரிடம், “எங்கே செல்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு ரெப்லிப், “நான் மெஸ்ரிச்சர் மாகித் என்ற இராபியைச் சந்திக்கச் செல்கிறேன்” என்றார். அதற்கு அவருடைய நண்பர் அவரிடம், “ஓ! அவர் கொடுக்கும் மறைநூல் விளக்கங்களை அறிந்துகொள்ளப் போகிறாயா?” என்று கேட்டார். அதற்கு ரெப் லிப், “இல்லை இல்லை, நான் அவரிடமிருந்து அவரை தூய்மையான வாழ்க்கையை பாடமாகக் கற்றுக்கொள்ளப்போகிறேன். அவரைப் போன்ற தூய்மையான மனிதர் இந்த உலகத்தில் பார்க்க முடியாது” என்றார். ரெப் லிப், மெஸ்ரிச்சேர் மாகிதின் தூய்மையைக் கண்டு வியந்ததுபோன்று, நம்முடைய தூய்மையான வாழ்வைக் கண்டு, மற்றவர்கள் வியக்கும் நாள் எந்நாளோ?.
ஆகவே, மரியாவின் அமலோற்பவப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து அவரைப் போன்று தூய மாசற்ற வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறைவன் அளிக்கும் முடிவில்லா வாழ்வைக் கொடையாகப் பெறுவோம்.
“தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்” (மத் 5:8).

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

தன்னூத்து மின்னல்மாதா திருத்தல நிகழ்வுகள்

தன்னூத்து மின்னல் மாதா திருத்தல சனிக்கிழமை &ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்

சனிக்கிழமை நிகழ்வுகள்

நண்பகல்  11 மணிக்கு ஜெபமாலை

நண்பகல்  11.30 மணிக்கு நவநாள் ஜெபம்

11-45மணிக்கு குணமளிக்கும் திருப்பலி

மதியம்,  1 மணிக்கு நற்க்கருணை, ஆராதனை&ஆசீர் நடைபெறும்

இரவு  7 மணிக்கு ஜெபமாலை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்வுகள்

11 மணிக்கு ஜெபமாலை
11.30 மணிக்கு நவநாள் ஜெபம்
11-45மணிக்கு சாட்சியபகிர்வு
12. மணிக்கு குணமளிக்கும் திருப்பலி
1. 45 மணிக்கு அனைவருக்கும் அன்னையின் ஆசிபெற்ற அசனப்பகிர்வு நடைபெறும்

மாலை  7 மணிக்கு ஜெபமாலை நடைபெறும்

நோயாளிகள், துன்ப, துயர நிலையில், இருக்கும். அனைத்து மக்களும் சிறப்பாக அருட்தந்தையர்களால் ஜெபிக்கபடும்

திருபயணிகளின் தேவைகேற்ப திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றபடும்

அனைவரும் வருக மின்னல் மாதா அருள் பெறுக

          மரியே வாழ்க

திருத்தல அதிபர்
அருட்தந்தை  S A Anthony Samy  Cell 9443142610

மேலும் தொடர்புக்கு
J பீட்டர் அல்போன்ஸ்
செல் 9442332791                   

ஆண்டவரின் கணக்கு



ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு

வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.

இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,

அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.

வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.

அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.

சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?

என்றார் வந்தவர்.

இருவரில் முன்னவர் சொன்னார்,

என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.

இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,

ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,

இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.

 மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.

( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)

நீங்கள் உங்கள் ரொட்டிகளை,

ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.

இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!

நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.

இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…

ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...

பொழுது விடிந்தது, மழையும் நின்றது.

மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,

என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து,

நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்,

என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.

மூன்று ரொட்டிகளை கொடுதவர்,

அந்த காசுகளை சமமாகப்பிரித்து,

ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.

மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.

மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.

ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)

மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,

என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,

நான் பங்கிட சம்மதித்தேன்…

நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.

அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது,

என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.

சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது.

அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.

நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்.

மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.

வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…

மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து,

தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

அடுத்த நாள் சபை கூடியது.

மன்னர் இருவரையும் அழைத்தார்.

மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்,

ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.

ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...!  இது அநியாயம்.

அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார்.

அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்.

அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது.

அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.

அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.

ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி.

இதற்கு இதுவே அதிகம் .

அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்.

ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்...

ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்…

நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...

எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.

இது கடவுளின் கணக்கு...

இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை...

தர்ம புண்ணிய கணக்கு...!

நாம் செய்யும் செயலில் இறைவன் இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.
முழுமையாக தன்னை சேவைக்கு அர்பணித்துக் கொண்டவர்களை இறைவன் அறிவார். 

Wednesday, December 5, 2018

டிசம்பர் 5 இன்றைய புனிதா்

டிசம்பர் 5

நீல்ஸ் ஸ்டீன்சென்” (Niels Steensen) எனும் இயற்பெயர் கொண்ட அருளாளர் நிகோலஸ் ஸ்டெனோ, ஒரு "டேனிஷ்" விஞ்ஞானி (Danish Scientis) ஆவார். உடற்கூறியல், புதைபடிமவியல், புவியியல் ஆகியவற்றில் முன்னோடியாகத் திகழ்ந்த இவர் பின்னாளில் "முன்ஸ்டர்" (Münster) மறைமாவட்டத்தில் கத்தோலிக்க ஆயராக பணியாற்றினார். இவர் அறிவியலில் பாரம்பரிய நூல்களைக் கற்றவர். நிகோலஸ் ஸ்டெனோ, நவீன புதைபடிமவியல் (Modern Stratigraphy) மற்றும் நவீன புவியியல் (Modern Geology) ஆகியனவற்றின் கண்டுபிடிப்பாளர் என்ற பெயர் பெற்றவர்.

கி.பி. 1638ம் ஆண்டு, புத்தாண்டு தினத்தில், “டென்மார்க்” (Denmark) நாட்டின் தலைநகரான கோபென்ஹகன்” (Copenhagen) நகரில், ஒரு லூதரன் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அருளாளர் நீல்ஸ் ஸ்டீன்செனின் தந்தை ஒரு பொற்கொல்லர் ஆவார். டென்மார்க்அரசன் நான்காம் கிறிஸ்டியன்” (King Christian IV of Denmark) என்பவருக்காக தொடர்ந்து பணியாற்றிய இவரது தந்தை பெயர், "ஸ்டீன் பெடேர்சென்" (Steen Pedersen) ஆகும். இவரது தாயாரின் பெயர் "அன்னி நீல்ஸ்டட்டர்" (Anne Nielsdatter) ஆகும். தமது மூன்று வயதிலேயே பெயர் அறியாத ஒரு நோயால் தாக்குண்ட இவர், நோய் தீராததால் தனிமையிலே வாழ்ந்து வந்தார். கி.பி. 1644ம் ஆண்டு, இவருக்கு ஆறு வயதாகையில், இவரது தந்தை மரித்துப் போனார். இவரது தாயாரோ, வேறொரு பொற்கொல்லரை மறுமணம் செய்துகொண்டார்.

ஸ்டெனோ, தமது பத்தொன்பது வயதில் கோபென்ஹகன் பல்கலையில்” (University of Copenhagen) இணைந்து மருத்துவம் கற்றார். மருத்துவ படிப்பை பூர்த்தி செய்ததும் ஐரோப்பிய நாடுகள் முழுதும் பயணித்தார். இதனால் இவருக்கு நெதர்லாந்து (Netherlands), ஃபிரான்ஸ் (France), இத்தாலி (Italy) மற்றும் ஜெர்மனி (Germany) நாடுகளிலுள்ள முக்கிய மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் தொடர்பு கிட்டியது. இந்த தாக்கங்கள், முக்கியமான அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்வதற்கும் அவரின் சொந்த கூர்நோக்கும் சக்தியை உபயோகிப்பதற்கும் வழிநடத்தியது.

ஸ்டெனோவின் கேள்வி கேட்கும் குணம், அவரது மதம் சம்பந்தமான பார்வையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. லூதரன் கிறிஸ்தவ சபை குடும்பத்தில் பிறந்து வந்திருந்த அவர், ஆனாலும் அதன் போதனைகளை கேள்விக்குட்படுத்தினார், ரோமன் கத்தோலிக்கத்தை எதிர்கொண்டபோது பற்றியெரியும் பிரச்சினையாக மாறியது. திருச்சபை தந்தையர் மற்றும் இயற்கை இயல்பான திறன்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட இறையியல் ஆய்வுகளை ஒப்பிட்டதன் பின்னர், லூதரனியம் அல்லாது, கத்தோலிக்கம் தனது தொடர்ச்சியான ஆர்வத்துக்கு இன்னும் அதிகமான உணவை வழங்கிடுமென முடிவு செய்தார். அத்துடன், மத்திய இத்தாலியின் டுஸ்கனி” (Tuscany) பிராந்தியத்தின் லூக்கா” (Lucca) நகர பிரபுத்துவ பெண்மணியான லாவினியா” (Lavinia Cenami Arnolfini) என்பவரின் வற்புறுத்தலின்பேரில், 1667ம் ஆண்டு, அனைத்து ஆன்மாக்கள் தினத்தன்று, கத்தோலிக்க கிறிஸ்தவ விசுவாசத்தை ஏற்று கத்தோலிக்க மறையை தழுவினார். விஞ்ஞானத்தில் நாட்டம் கொண்டிருந்த ஸ்டெனோவின் ஆர்வம் இறையியல் கற்பதில் மாறியது.

கி.பி. 1675ன் ஆரம்பத்தில் கத்தோலிக்க குருவாக வேண்டுமென்ற ஆர்வம் கொண்டார். அதே வருடம் உயிர்த்தெழுதல் திருவிழாவன்று குருத்துவ அருட்பொழிவு பெற்றார். பின்னாளில், திருத்தந்தை பதினொன்றாம் இன்னொஸன்ட் (Pope Innocent XI) இவரை ஆயராக நியமனம் செய்தார். ஒரு மதகுருவாக, இவர் வட ஜெர்மனியில் செய்த எதிர்-சீர்த்திருத்த பணிகளில் முக்கிய பங்காற்றினார்.


பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு மறைபோதனையாற்றிய ஸ்டெனோ நெடிய அனுபவங்களைப் பெற்றார். தமது கடைசி காலத்தில் இத்தாலிக்கு திரும்ப விரும்பிய அவரால் அது இயலாமல் போனது. வயிற்று வழியால் வேதனையுற்ற இவரது வயிறு, நாளுக்கு நாள் வீக்கம் கொண்டது. வலி வேதனைகளால் மிகவும் துயருற்ற இவர், கி.பி. 1686ம் ஆண்டு, நவம்பர் மாதம், 25ம் நாள், ஜெர்மனியில் மரித்தார்.